திமுக இயக்கத்தை இந்து விரோதி என்று திசை திருப்பி விட முயற்சிக்கிறார்கள் - திமுக தலைவர் ஸ்டாலின்


திமுக இயக்கத்தை இந்து விரோதி என்று திசை திருப்பி விட முயற்சிக்கிறார்கள் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 July 2020 3:32 PM IST (Updated: 20 July 2020 3:32 PM IST)
t-max-icont-min-icon

திமுக இயக்கத்தை இந்து விரோதி என்று சிலர் திசை திருப்பி விட முயற்சிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

‘கருப்பர் கூட்டம்’ என்ற யூ-டியூப் பக்கத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் கருப்பர் கூட்டம் யூ-டியூப் பக்கத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனை தொடர்ந்து திமுகவின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தார். முருகனை பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று கூறிய அவர் திமுக தலைவர் ஸ்டாலின் மீது திட்டமிட்டு பொய்யான பரப்புரைகள் செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சிலர் திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது;-

“திமுக இயக்கத்தை ‘இந்து விரோதி’ என்ற பழைய சிந்தனை மூலம் திசை திருப்பி விட முயற்சிக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை இந்துக்களுக்கான ஓ.பி.சி.க்களின் 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டபோராட்டத்தை திமுக நடத்திக்கொண்டிருக்கிறது.

அரசியலமைப்பு உரிமைகள் பறிபோகும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலம் இது. கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண் நிலங்கள், தொழிற்துறை, வணிகர் நலன், மாநில உரிமைகள், கருத்துரிமைகளைப் பாதுகாக்க, அறப்போர்க் களத்தைக் கட்டியமைப்போம்; அக்கப்போர்க் களங்களைப் புறக்கணிப்போம்.

எந்த மதத்தின் மீதும் திமுகவுக்கு வெறுப்பு கிடையாது. எவரது நம்பிக்கையிலும், பழக்க வழக்கங்களில்லும் திமுக குறுக்கிடுவதில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story