தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
x

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மேலும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தருமபுரி, சேலம், கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்கோனாவில் 5 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சித்தாருவில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை வட கடலோரத் தமிழகம், புதுவை, காரைக்கால், சென்னை, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்”

 இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story