மாநில செய்திகள்

பணியில் இருந்த போது உயிரிழந்த திருவாரூர் ராணுவ வீரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு + "||" + Government job for one of the family of a Thiruvarur soldier who died while on duty - Chief Minister Palanisamy's announcement

பணியில் இருந்த போது உயிரிழந்த திருவாரூர் ராணுவ வீரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

பணியில் இருந்த போது உயிரிழந்த திருவாரூர் ராணுவ வீரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
எல்லை பாதுகாப்பு பணியில் இருந்த போது உயிரிழந்த திருவாரூர் ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் திருமூர்த்தி(47). இவர் கடந்த 31 வருடங்களாக எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் காஷ்மீர் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த போது கடந்த 26 ந்தேதி இரவு துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அது வெடித்து, திருமூர்த்தியின் முகத்தில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது உடலில் பாய்ந்த குண்டு நீக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமூர்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இவருக்கு மனைவி தமிழரசி மகள் அகல்யா, மகன் அகத்தியன் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுபணி வழங்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. லடாக் எல்லைக்கு தளவாடங்களை கொண்டு சென்றபோது வாகன விபத்தில் தேனி ராணுவ வீரர் பலி
ஒடிசாவில் இருந்து லடாக் எல்லைக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்றபோது வாகன விபத்தில் சிக்கி தேனி ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.