நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா உறுதி


நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 2 Aug 2020 10:26 AM GMT (Updated: 2020-08-02T15:56:19+05:30)

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  செல்கிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில் நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்ட நிலையில் தற்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story