சென்னையில் விடிய விடிய பரவலாக கனமழை


சென்னையில் விடிய விடிய பரவலாக கனமழை
x
தினத்தந்தி 3 Aug 2020 10:03 AM IST (Updated: 3 Aug 2020 10:03 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் விடிய விடிய பரவலாக கனமழை பெய்துள்ளது.

சென்னை,

சென்னையில் விடிய விடிய பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது. சைதாப்பேட்டை, அடையார், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், திருவான்மியூர், தேனாம்பேட்டை, கிண்டி ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது. ஆங்காங்கே விட்டு விட்டு கன மழை பெய்தது. சென்னைப் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம், பழவந்தாங்கல் போன்ற பகுதிகளில் இரவு 10.30 மணியில் இருந்து மிதமான மழை பெய்து கொண்டு  இருக்கிறது.

பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பகல் நேரத்தில் கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், மாலையில் பொன்னேரி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, சோழவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட இடங்களில் சுமார் 30 நிமிடங்கள் கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 More update

Next Story