சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று


சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு  கொரோனா தொற்று
x
தினத்தந்தி 3 Aug 2020 6:04 AM GMT (Updated: 2020-08-03T11:44:32+05:30)

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை,

தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா  வைரஸ் தொற்றுக்கு களப்பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளும் தப்பவில்லை. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள்  மட்டுமே இருப்பதால் மருத்துவர் ஆலோசனைப்படி  வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்,


Next Story