10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 4 Aug 2020 7:39 AM GMT (Updated: 2020-08-04T13:09:45+05:30)

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

10- வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும். மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story