வாடகை வீட்டை காலி செய்ய காவல்துறை மூலம் வற்புறுத்திய விவகாரம்: சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு


வாடகை வீட்டை காலி செய்ய காவல்துறை மூலம் வற்புறுத்திய விவகாரம்: சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 4 Aug 2020 8:44 AM GMT (Updated: 2020-08-04T14:14:49+05:30)

வாடகை வீட்டை காலி செய்ய காவல்துறை மூலம் வற்புறுத்திய விவகாரம் தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய காவல்துறை மூலம் வற்புறுத்திய விவகாரம் தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனைவி கண்முன் காவல் ஆய்வாளர் தாக்கியதால் மனமுடைந்த பெயிண்டர் சீனிவாசன் தீக்குளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

முன்னதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை துவங்கியது.

Next Story