ராமர் கோயில் பூமி பூஜைக்கு 11 வெள்ளி செங்கல்கள் அனுப்பப்படும் - மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் தகவல்


ராமர் கோயில் பூமி பூஜைக்கு 11 வெள்ளி செங்கல்கள் அனுப்பப்படும் - மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2020 10:30 AM GMT (Updated: 2020-08-04T16:00:05+05:30)

ராமர் கோயில் பூமி பூஜைக்கு 11 வெள்ளி செங்கல்கள் உருவாக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் கூறினார்.

போபல்,

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடக்க உள்ளது. அதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்த விழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடைபெற இருப்பதால் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் ராமர்கோயில் பூமி பூஜை விழா நாளை நடைபெறவுள்ள நிலையில் மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் தனது வீட்டில் இன்று அனுமன் சாலிசா பாராயண நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராமர் படம் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்திப்பட்டது. பின்னர் வேத விற்பன்னர்கள் இணைந்து அனுமன் சாலிசா பாராயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கமல்நாத் பக்தியுடன் வழிபாடு நடத்தினார்.

பின்னர் பேசிய மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத்,

''அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் தினம் வரலாற்று சிறப்பு மிக்க தினம்  என்றும், மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸார் திரட்டிய நன்கொடை மூலம் 11 வெள்ளி செங்கல்கள் உருவாக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மத்திய பிரதேச மாநில மக்களின் நலனுக்காக அனுமன் சாலிசா பாராயணம் செய்யப்பட்டது'' எனக் கூறினார்.

Next Story