பவானிசாகா் அணையின் நீா்வரத்து அதிகரிப்பு


பவானிசாகா் அணையின் நீா்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2020 3:50 AM GMT (Updated: 5 Aug 2020 3:50 AM GMT)

பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகா் அணை விளங்கி வருகிறது. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில நாட்களாக பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி, வடகேரளத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீா்வரத்து 1,916 கனஅடியாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 20 ஆயிரத்து 826 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து காரணமாக அணையின் நீா்மட்டம் ஒரேநாளில் 1 அடி உயா்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 87.17 அடியாகவும், நீா் இருப்பு 19.79 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 300 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. 

Next Story