நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்-க்கு கொரோனா பாதிப்பு உறுதி


நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்-க்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 5 Aug 2020 10:16 AM GMT (Updated: 2020-08-05T15:46:47+05:30)

நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்-க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள், சினிமா, அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் சமீபத்தில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்-மந்திரிகள் மற்றும் ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்-க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில் கருணாஸ்-க்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் வீட்டில் கருணாஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது திருவாடானை தொகுதி எம்எல்ஏ-வாக கருணாஸ் இருந்து வருகிறார்.

Next Story