டாஸ்மாக் வருமானத்தால் நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், பொது நலன் இல்லை- மதுரை ஐகோர்ட்


டாஸ்மாக் வருமானத்தால் நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், பொது நலன் இல்லை-  மதுரை ஐகோர்ட்
x
தினத்தந்தி 6 Aug 2020 8:34 PM IST (Updated: 6 Aug 2020 8:34 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை ஒன்றை மூடக் கோரிய வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி எழுப்பியது.

மதுரை

தேனி மாவட்டம் அன்னை சத்யா நகரில் உள்ள மறுவாழ்வு மையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘டாஸ்மாக் கடைகளின் வருவாயில் நலத்திட்ட உதவிகள் செய்தாலும் மதுக்கடைகள் திறந்ததில் பொது நலன் ஏதுமில்லை. டாஸ்மாக் கடைகளில் கூட்டம், தனி மனித இடைவெளியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? மதுபாட்டிலில் குறிப்பிட்டுள்ள விலைக்குதான் விற்கப்படுகிறதா? மதுக்கூடங்களில் பாட்டில், பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக அகற்றப்படுகின்றனவா?" என நீதிபதிகள் சரமாறியாக கேள்விகள் எழுப்பினர். பின்னர வழக்கை செப்டம்பர் 3-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

1 More update

Next Story