மாநில செய்திகள்

தூத்துக்குடி-பெங்களூரு விமான சேவை நாளை மீண்டும் தொடக்கம் + "||" + Thoothukudi-Bengaluru Flight Service Starting again tomorrow

தூத்துக்குடி-பெங்களூரு விமான சேவை நாளை மீண்டும் தொடக்கம்

தூத்துக்குடி-பெங்களூரு விமான சேவை நாளை மீண்டும் தொடக்கம்
தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு விமான சேவை நாளை மீண்டும் தொடங்குகிறது.
தூத்துக்குடி, 

இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி விமான நிலையம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 5 சேவையும், பெங்களூருக்கு ஒரு விமான சேவையும் வழங்கப்பட்டு வந்தது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து சென்றனர். இதன் காரணமாக விமான நிலைய விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வந்தன.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக விமானசேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக மீண்டும் தூத்துக்குடி-சென்னை விமானம் இயங்க தொடங்கியது. தற்போது தூத்துக்குடி-சென்னை இடையே 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி-பெங்களூரு இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. நாளை(சனிக்கிழமை) முதல் இந்த விமான சேவை தொடங்குகிறது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் மட்டும் இந்த விமானம் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து காலை 7-20 மணிக்கு புறப்படும் விமானம் 9 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. தூத்துக்குடியில் இருந்து காலை 9-20 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த விமான சேவை மீண்டும் தொடங்குவதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா- வங்காளதேசம் இடையே வரும் 28 ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவையை தொடங்க முடிவு
இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை பின்பற்றி “ ஏர் பபிள்” என்ற முறையில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன
2. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் துபாய் சேவைக்கு விதிக்கப்பட்ட 15 நாள் தடை நீக்கம்
துபாயில் இருந்து விமான சேவை வழக்கம் போல் இயங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
3. சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரிப்பு: கொல்கத்தா, மும்பைக்கு விமான போக்குவரத்து தொடங்கியது
சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரிப்பால் கொல்கத்தா, மும்பைக்கு விமான போக்குவரத்து தொடங்கியது.
4. ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படலாம்...?
ஊரடங்கில் இருந்து விடுபடும் இரண்டாம் கால கட்டமான ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு சில சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
5. இந்தியாவில் விமான சேவையை தொடங்குவது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கருத்து
இந்தியாவில் விமான சேவையை தொடங்குவது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கருத்து தெரிவித்துள்ளார்.