தூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு


தூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 18 Aug 2020 12:59 PM GMT (Updated: 2020-08-18T18:29:24+05:30)

தூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி துரைமுத்து. இவர் மீது இரட்டை கொலை வழக்கு உள்ள நிலையில் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் வல்லநாடு வனப்பகுதியில் ரவுடி துரைமுத்து பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரவுடி துரைமுத்து பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்போது போலீஸார் வருவதை அறிந்த ரவுடி தரப்பினர் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். 

இந்த வெடிகுண்டு தாக்குதலில் காவலர் சுப்பிரமணியம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு காவலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து காவலர் மீது குண்டு வீசிய ரவுடி துரைமுத்து உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Next Story