தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 18 Aug 2020 7:26 PM IST (Updated: 18 Aug 2020 7:26 PM IST)
t-max-icont-min-icon

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  செல்கிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரை தொடர்ந்து அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை அப்பலோ மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 More update

Next Story