கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 19 Aug 2020 8:54 AM GMT (Updated: 2020-08-19T14:24:59+05:30)

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  செல்கிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரை தொடர்ந்து அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை அப்பலோ மருத்துவமனையில் 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அவரது மனைவி,மகள் ஆகியோர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.

Next Story