காவலர் சுப்பிரமணியனின் உடலை போலீஸ் அதிகாரிகள் சுமந்து சென்றனர்


காவலர் சுப்பிரமணியனின் உடலை போலீஸ் அதிகாரிகள் சுமந்து சென்றனர்
x
தினத்தந்தி 19 Aug 2020 12:40 PM GMT (Updated: 2020-08-19T18:10:50+05:30)

காவலர் சுப்பிரமணியனின் உடலை டிஜிபி திரிபாதி, தென் மண்டல ஐஜி முருகன், டிஐஜி பிரவின் குமார் சுமந்து சென்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்துக்கு திருநெல்வேலி சரக டிஐஜி அலுவலகத்தில் தமிழக டிஜிபி திரிபாதி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காவலர் சுப்பிரமணியனின் உடலை டிஜிபி திரிபாதி, தென் மண்டல ஐஜி முருகன், டிஐஜி பிரவின் குமார் அபினவ், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், திருநெல்வேலி எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் தோலில் சுமந்தபடி எடுத்து சென்றனர்.


Next Story