மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறப்பு ? வரும் 31 ஆம் தேதி முடிவு - தொல்லியல் துறை தகவல்

மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறக்கப்படுவது குறித்து வரும் 31 ஆம் தேதி முடிவு செய்ய இருப்பதாக தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறக்கப்படுவது குறித்தும் மாமல்லபுரத்தில் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழக அரசுடன் கலந்து ஆலோசிக்க உள்ளதாக தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த ஆலோசனையில் மாமல்லபுரத்தை திறக்கும் தேதி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story