என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 24-ந்தேதி வரை அவகாசம்

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 24-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி, நிறைவு பெற்றது. அதன் தொடர்ச்சியாக விண்ணப்ப கட்டணம் செலுத்திய மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி, விண்ணப்ப கட்டணம் செலுத்திய மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்து வந்தனர். அதற்கான கடைசி நாள் நேற்று என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான அவகாசத்தை வருகிற 24-ந்தேதி வரை நீட்டித்து அறிவித்திருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் புருசோத்தமன் தெரிவித்துள்ளார்.
விண்ணப்ப கட்டணம் செலுத்திய 1 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில், நேற்றைய நிலவரப்படி 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Tags :
Next Story