தங்கம் விலை பவுனுக்கு ரூ.352 உயர்வு


தங்கம் விலை பவுனுக்கு ரூ.352 உயர்வு
x
தினத்தந்தி 21 Aug 2020 11:33 AM IST (Updated: 21 Aug 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை பவுனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.29 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், கடந்த 7ந்தேதி ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328 என்ற வரலாறு காணாத உயர்வை சந்தித்தது. அதற்கு மறுநாளில் இருந்து தங்கம் விலை சரிவை நோக்கி சென்று, மீண்டும் 14ந்தேதி உயர்ந்து காணப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 2 நாட்கள் விலையில் மாற்றம் இல்லாமல், கடந்த 17ந்தேதி விலை அதிகரித்தது.  இதன்பின்னர் 3 நாட்களாக விலை தொடர்ந்து சரிவை நோக்கி சென்றது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.126ம், பவுனுக்கு ரூ.1,008ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 40க்கும், ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 320க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அந்த அளவுக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 12ந்தேதி பவுனுக்கு ரூ.1,104 குறைந்த நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.1,008 குறைந்திருந்தது.

இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் இன்று உயர்வை சந்தித்துள்ளது.  ஒரு கிராம் தங்கம் ரூ.5,084க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதன்படி, தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 More update

Next Story