கொரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக்கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன்


கொரோனா அச்சுறுத்தல்:  தனிமைப்படுத்திக்கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
x
தினத்தந்தி 1 Sept 2020 11:44 AM IST (Updated: 1 Sept 2020 11:44 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சுறுத்தலால் அமைச்சர் ஓ எஸ் மணியன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

நாகை

கைத்தறி  துறை அமைச்சர் ஓ.எஸ் மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 28ந்தேதி உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டம் ஓரடியம்புலத்தில் அமைச்சரின் மனைவி கலைச்செல்வி இறுதிச்சடங்கு நடந்தது. இறுதிச்சடங்கில் உறவினர்கள், அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சரின் உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒருவாரத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.

Next Story