வரும் 9-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு


வரும் 9-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Sep 2020 6:31 AM GMT (Updated: 2020-09-01T12:01:31+05:30)

வரும் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், வரும்   9-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும்   9-ஆம் தேதி காலை 10 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும்  பொருளாளராக டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளது. 

Next Story