மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும். - அமைச்சர் விஜயபாஸ்கர்
மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் படி இன்று முதல் மாவட்டத்திற்கு பேருந்து சேவை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும்.
இரவு 9 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து சேவை அதிகரிக்கப்படும்.
செப். 15ம் தேதி வரை பழைய ரூ.1,000 பஸ் பாஸ் செல்லுபடியாகும்” என்றார்.
Related Tags :
Next Story