வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்


வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
x
தினத்தந்தி 1 Sept 2020 5:24 PM IST (Updated: 1 Sept 2020 5:24 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னையில் 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சென்னையில் 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொழில் நிறுவன ஊழியர்களுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்துதல் கிடையாது.

தனிமைப்படுத்துதலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்றும், நாளை முதல் வீட்டிலேயே அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்றும் சென்னை கடற்கரைக்கு மக்களை அனுமதிப்பது தொடர்பாக அரசின் உயர்மட்டக்குழு முடிவு செய்யும் என்றும் ஆணையர் பிரகாஷ் கூறினார்.

மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், தொற்று குறைந்து விட்டது என்று நினைக்காமல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற பயணம், வெளியே சுற்றுவதை 3 மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story