ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை


ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
x
தினத்தந்தி 2 Sept 2020 2:33 PM IST (Updated: 2 Sept 2020 2:33 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ம் வகுப்பு மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேனி, 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த மாணவன் தனது வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஆன்லைனில் எடுக்கும் பாடங்கள் புரியவில்லை என்று தனது பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.  

இந்நிலையில் அந்த மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story