கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிட கூடாது? சென்னை உயர்நீதிமன்றம்


கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிட கூடாது? சென்னை உயர்நீதிமன்றம்
x
தினத்தந்தி 3 Sept 2020 3:23 PM IST (Updated: 3 Sept 2020 3:23 PM IST)
t-max-icont-min-icon

கோவில்களின் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அறங்காவலர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிட கூடாது?  

பொறுப்பில் இருப்பவர்களின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு உள்ளது? நிர்வாகிகளின் விவரங்களை கோவில் அறிவிப்பு பலகையில் ஏன் வெளியிட கூடாது? எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த  வழக்கில் செப்டம்பர் 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story