தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என அறிவிப்பு


தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Sep 2020 3:03 PM GMT (Updated: 4 Sep 2020 3:03 PM GMT)

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா விதிமுறைகளான பொது இடங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் பொது சுகாதார சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்தது. 

தமிழக அரசின் இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் கொடுத்துள்ளார். திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் படி கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

  • பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ. 500 அபராதம்.
  • பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்.
  • தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான விதிகளை மீறினால் ரூ. 500 அபராதம்.
  • பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். 
  • கொரோனா விதிமுறைகளை மீறும் ஜிம், சலூன், ஸ்பா நிலையங்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.


Next Story