தோல்வி அடைந்த மாணவர்களுக்கு வாய்ப்பு: 10, 12-ம் வகுப்புக்கான மறுதேர்வு 22-ந்தேதி தொடங்குகிறது - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
10, 12-ம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வு 22-ந்தேதி தொடங்கும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
சென்னை,
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்து இருக்கிறது.
அதன்படி, 10-ம் வகுப்புக்கு மறுதேர்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி, 28-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல், 12-ம் வகுப்புக்கான மறுதேர்வு 22-ந்தேதி ஆரம்பித்து, 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 2 தேர்வுகளும் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற இருக்கிறது.

Related Tags :
Next Story