நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான்: கமல்ஹாசன் டுவிட்


நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான்: கமல்ஹாசன் டுவிட்
x
தினத்தந்தி 5 Sept 2020 12:17 PM IST (Updated: 5 Sept 2020 12:17 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை, 

இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளராகவும், தத்துவஞானியுமாகவும் திகழ்ந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. 

அந்த வகையில், இன்று செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- நாளைய தமிழகத்தின் நம்பிக்கையாம் நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான். அவர்களை இன்றும் என்றும் நினைவில் கொண்டு வாழ்த்துவோம். போற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.


Next Story