உரிமைக்காக போராடிய தியாகத்தின் திருவுருவம் வ.உ.சி.; தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம்


உரிமைக்காக போராடிய தியாகத்தின் திருவுருவம் வ.உ.சி.; தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம்
x
தினத்தந்தி 5 Sept 2020 3:36 PM IST (Updated: 5 Sept 2020 3:36 PM IST)
t-max-icont-min-icon

தியாகத்தின் திருவுருவான வ.உ. சிதம்பரனாரின் நினைவை நெஞ்சில் ஏந்தி போற்றுவோம் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிமைக்காக போராடவும் வாதாடவும் சிறை செல்லவும் தயங்காத தியாகத்தின் திருவுருவம் வ.உ.சி என்று கூறியுள்ளார்.

வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிரான போர் குணத்துக்கும், அடக்குமுறைக்கும் அஞ்சாமைக்கும், அயராத உழைப்புக்கும் அரிய உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் வ.உ.சிதம்பரனார் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் இழந்து, இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர் வ.உ. சிதம்பரனார் என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

Next Story