பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல- பள்ளி கல்வித்துறை


பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல-  பள்ளி கல்வித்துறை
x
தினத்தந்தி 6 Sept 2020 12:11 PM IST (Updated: 6 Sept 2020 12:11 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை என்று பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி, தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில்,  பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது . ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story