விஜய்யை எம்.ஜி.ஆராக சித்தரித்த போஸ்டர் :"எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து


விஜய்யை எம்.ஜி.ஆராக சித்தரித்த போஸ்டர் :எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து
x
தினத்தந்தி 6 Sept 2020 4:13 PM IST (Updated: 6 Sept 2020 4:13 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர் போல் சித்தரிப்பதன் மூலம் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ  இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சங்கரேஸ்வரி கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

நடிகர் விஜய், எம்ஜிஆர் போல் உள்ள சுவரொட்டி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஜி.ஆர் போல் சித்தரிப்பதன் மூலம் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது.

தமிழகத்தில் மிகப்பெரிய சக்தி, அதிமுக என்பது அனைவருக்கும் தெரியும். தேர்தல் வரும் நேரத்தில் டெபாசிட் வாங்காத கட்சி கூட ஆட்சியை பிடிப்போம் என்றும் நாங்கள்தான் முதல்வர் என கூறுவார்கள். ஆனால் 2021-ல் அதிமுக ஆட்சிதான் அமையும். 

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Next Story