பயணிகள் கோரிக்கையை ஏற்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
பயணிகளின் கோரிக்கையை ஏஎற்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மெட்ரோ ரெயில் சேவையை கடந்த 7 ஆம் தேதி முதல் மீண்டும் துவக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, சுமார் 166 நாட்களுக்குப் பிறகு நாடு முழுவதும் பெரு நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் துவங்கியுள்ளது. காலை 7 மணி முதல் 8 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இரவு 9 மணி வரை சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் எனவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயணிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story