பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு: ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது - கனிமொழி எம்.பி.


பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு: ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது - கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 10 Sept 2020 8:37 AM IST (Updated: 10 Sept 2020 8:37 AM IST)
t-max-icont-min-icon

ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருக்க முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திரும்பப்பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், “பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் 110 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் அனைத்தும் பொதுமுடக்க காலத்தில்தான் நடைபெற்றுள்ளன.

வங்கிகளில் கடன் பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம் என்று தமிழக பிஜேபி இணையதளம் தொடங்கியது இதற்காகத்தானா? 5 லட்சம் போலி பயனாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதென்பது, ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story