நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 13 Sept 2020 4:26 AM IST (Updated: 13 Sept 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இந்த சேர்க்கை இம்மாதம் 30-ந் தேதி வரை நடைபெறும். அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது.

நீட் தேர்்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையாக உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு 238 மையங்களில் நடக்கிறது. இதில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் தேர்வை எழுத உள்ளனர். பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை.இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்



Next Story