நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவடைந்தது


நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவடைந்தது
x
தினத்தந்தி 13 Sept 2020 5:25 PM IST (Updated: 13 Sept 2020 5:25 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது.

சென்னை, 

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் எழுதினார்கள். தமிழ்நாட்டில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதினர். 

இந்நிலையில்நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 

சென்னையில் தேர்வு எழுதிய சில மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு சில மாணவர்கள் இயற்பியல் கேள்விகள் கடினமானதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடும் சோதனைகளுக்கு பின்னர் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  

Next Story