மாநில செய்திகள்

கொளத்தூரில் ‘ஒரு லட்சம் பேருக்கு உணவு திட்டம்’:மு.க.ஸ்டாலின் 4-ம் கட்டமாக ரூ.10 லட்சம் வழங்கினார் + "||" + 'Food program for one lakh people' in Kolathur: MK Stalin provided Rs 10 lakh for the 4th phase

கொளத்தூரில் ‘ஒரு லட்சம் பேருக்கு உணவு திட்டம்’:மு.க.ஸ்டாலின் 4-ம் கட்டமாக ரூ.10 லட்சம் வழங்கினார்

கொளத்தூரில் ‘ஒரு லட்சம் பேருக்கு உணவு திட்டம்’:மு.க.ஸ்டாலின் 4-ம் கட்டமாக ரூ.10 லட்சம் வழங்கினார்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின்படி, கடந்த ஜூலை 18-ந்தேதி ‘ஒரு லட்சம் பேருக்கு உணவு’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார்.
சென்னை, 

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின்படி, கடந்த ஜூலை 18-ந்தேதி ‘ஒரு லட்சம் பேருக்கு உணவு’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இதையொட்டி, சமையல் கலைஞர்களிடம் ரூ.10 லட்சத்தை முதற்கட்டமாக அவர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது கட்டங்களாக முறையே கடந்த 3, 26-ந்தேதிகளில் தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் 4-வது கட்டமாக ரூ.10 லட்சத்தை சமையல் கலைஞர் துர்கா பிரசாத்திடம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள மக்களின் பசியை போக்கும் இத்திட்டத்துக்கான முழு செலவுகளையும் மு.க.ஸ்டாலின் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின்போது சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 4 நாட்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்-துரைமுருகன் அறிவிப்பு
மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 4 நாட்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
2. துணைவேந்தர் சூரப்பாவை ‘டிஸ்மிஸ்’ செய்ய கவர்னருக்கு உடனடியாக பரிந்துரைக்க வேண்டும்-முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
துணைவேந்தர் சூரப்பாவை ‘டிஸ்மிஸ்’ செய்ய கவர்னருக்கு உடனடியாக பரிந்துரைக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
3. மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்- சென்னையில் நாளை நடக்கிறது
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
4. “நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம்” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
5. கபட நாடகம் ஆடி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்; தமிழக அரசு மீது ஸ்டாலின் விமர்சனம்
கபட நாடகம் ஆடி, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.