"கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - பேரவையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - பேரவையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Sep 2020 8:10 AM GMT (Updated: 15 Sep 2020 8:10 AM GMT)

கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பேரவையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மாவட்டங்களில் உள்ள- மருத்துவமனை, ஆய்வகங்கள் வாரியாக கொரோனா சோதனை, படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், வென்டிலேட்டர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை வெளியிட வேண்டும் கொரோனா கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது. முறையாக திட்டமிடப்படாத பொது முடக்கத்தால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மரணங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை, குழுவின் அறிக்கை என்ன ஆனது? என்றும் கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா?, மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை முறையாக வழங்கப்பட்டுள்ளதா?  என்று கேள்வி எழுப்பினார். 

தமிழகத்தின் பொருளாதாரம் மேலும் படுமோசமாகும் சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே உபகரணங்கள் கொள்முதல், நியமனங்கள், மருத்துவமனை மற்றும் ஆய்வகங்கள் வாரியாக கொரோனா சோதனைகள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர், இறந்தோர், கொரோனா பேரிடருக்கு மாநில நிதி மற்றும் பேரிடர் நிதியிலிருந்து செலவழிக்கப்பட்ட தொகை, கொரோனாவால் மாநிலத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு, பொருளாதார, தொழில் வீழ்ச்சி ஆகியவை குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை, இன்னும் ஒரு நாள்தான் சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் இந்த அவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''

இவ்வாறு முக ஸ்டாலின் கூறினார்.

Next Story