மாநில செய்திகள்

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு - முதலமைச்சர் தாக்கல் செய்த சட்டமசோதா நிறைவேற்றம் + "||" + 7.5% reservation for public school students in medical studies - Passage of the Bill filed by the Chief Minister

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு - முதலமைச்சர் தாக்கல் செய்த சட்டமசோதா நிறைவேற்றம்

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு - முதலமைச்சர் தாக்கல் செய்த சட்டமசோதா நிறைவேற்றம்
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெரும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தது. ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டுமே இந்த ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. கட்டாயக் கல்வியுரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த உள் இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


தமிழக அரசின் இந்த அறிவிப்பை அவசர சட்டமாக இயற்றவும், அதை நடப்பு ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்தவும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தாக்கல் செய்தார்.

இதனையடுத்து தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவ படிப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை வழங்க வழிவகை செய்யும் சட்டமசோதா சட்டமன்றத்தில் தற்போது நிறைவேறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
2. மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு!
தமிழக அமைச்சரவை அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்துள்ளது.