திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் - மாவட்ட ஆட்சியர் ஆனந்த்
திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர்,
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், இந்த திட்டத்தில், விவசாயிகள் பலர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டத்தில் முதல்கட்டமாக, 13 மாவட்டங்களில், மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பணத்தை திருப்பி தராத தகுதியில்லா விவசாயிகள் மீது சட்டப்படி நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story