மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 Sept 2020 9:06 AM IST (Updated: 17 Sept 2020 9:06 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 14,458 கன அடியாக அதிகரித்துள்ளது.

சேலம்,

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 12,894 கன அடியில் இருந்து 14,458 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 91.78 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 91.67 அடியானது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 54.58 டி.எம்.சி. ஆக உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story