தமிழகத்தில் கொரோனா பாதித்த 46,166 குழந்தைகள் குணமடைந்தனர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்


தமிழகத்தில் கொரோனா பாதித்த 46,166 குழந்தைகள் குணமடைந்தனர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 18 Sept 2020 3:30 AM IST (Updated: 18 Sept 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பாதித்த 46,166 குழந்தைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதித்த 46,166 குழந்தைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 542 குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதைப்போல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 372 குழந்தைகளும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களுடன் அனுமதிக்கப்பட்ட 30 குழந்தைகளும், தொடர் சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளனர்.

இதைத்தவிர தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரத்து 222 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story