வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை


வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 18 Sept 2020 8:13 AM IST (Updated: 18 Sept 2020 8:13 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சென்னை உள்ளிட்ட வடமாவட்டங் களிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதரில் தொடங்க உள்ளது. இதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதிகமழை பெய்யும் மாவட்டங்களை கண்டறிந்து அங்கு கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story