வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில்: ஜி.கே.வாசன் வரவேற்பு
வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் என்ற அறிவிப்புக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளர்.
சென்னை,
இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தவறு செய்பவர்களுக்கு தண்டனையை அதிகரிக்க ஏற்கனவே உள்ள சட்டத்தில் சில திருத்தங்களை தமிழக அரசு கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலை பெற்று நடைமுறைப்படுத்தி உள்ளது.
தற்போது, பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் சட்டதிருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
பெண்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிசெய்யும் விதமாக இந்த அறிவிப்பு இருக்கிறது. சமூக நலனிலும், மக்களின் நலனிலும் அக்கறை கொண்ட அரசாக செயல்படும் தமிழக அரசுக்கு த.மா.கா. சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story