கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம்


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 20 Sept 2020 10:43 AM IST (Updated: 20 Sept 2020 10:43 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கோவை, 

கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 96 அடியை எட்டியது. இதன்படி நீர் மட்டம் 97 அடியை கடக்கும்போது அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரிநீர் பவானியாற்றில் வெளியேற்றப்படும்.

இந்நிலையில் பில்லூர் அணை நிரம்பி உள்ளதால் பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றபட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 13,000 கன அடியாக உள்ள நிலையில், பவானி ஆற்றில் 7,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story