மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 21 Sep 2020 5:35 AM GMT (Updated: 21 Sep 2020 5:35 AM GMT)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,241கன அடியில் இருந்து 12,450 கன அடியாக அதிகரித்துள்ளது.

சேலம்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,241கன அடியில் இருந்து 12,450 கன அடியாக அதிகரித்துள்ளர்து. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 89.77 அடியாக உள்ளது. அதேசமயம் அணையின் நீர் இருப்பு 52.38 டிஎம்சியாக உள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 18,000 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Next Story