சேலம், விசாகப்பட்டினத்தில் சோதனை: சுங்கத்துறை கமிஷனர் மீது சொத்து குவிப்பு வழக்கு - சி.பி.ஐ. நடவடிக்கை


சேலம், விசாகப்பட்டினத்தில் சோதனை: சுங்கத்துறை கமிஷனர் மீது சொத்து குவிப்பு வழக்கு - சி.பி.ஐ. நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Sept 2020 6:45 AM IST (Updated: 23 Sept 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடத்திய சோதனையில் சுங்கத்துறை கமிஷனர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

கோவா மாநிலத்தில் சுங்கத்துறை கமிஷனராக பணியாற்றி வந்தவர் ராஜகோபால் மனோகர். இவர் புதுச்சேரி மாநில ஜி.எஸ்.டி. கமிஷனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து 2019-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளார்.

இவர் தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் ரூ.1 கோடியே 39 லட்சத்து 34 ஆயிரத்து 906 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை குவித்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக இவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, சேலம் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள இடங்களில் சோதனை நடத்தியது. நிலங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

மேற்கண்ட தகவலை சி.பி.ஐ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story