மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்


மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்
x
தினத்தந்தி 23 Sept 2020 8:41 AM IST (Updated: 23 Sept 2020 8:41 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை, 

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோகன் தன்னிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கங்கை ராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். 

மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.30,000 ஐ வட்டியுடன் திருப்பி கொடுத்த பின்னரும் மிரட்டல் விடுத்து வருவதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். கங்கை ராஜன் அளித்த புகாரின் பேரில் மோகன் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் தனது மகளின் கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொரோனா நிதிக்காக வழங்கியிருந்ததுடன், பிரதமரின் மன் கி பாத் உரையிலும் மோகன் பாராட்டு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story