வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு
வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை,
மத்திய அரசு அண்மையில் 3 வேளாண் சட்ட மசோதாக்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களான, ‘விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்-2020’, ‘விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்-2020’, ‘அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம்-2020’ ஆகிய 3 சட்டங்களை எதிர்த்து மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி. சார்பில், மூத்த வக்கீல் பி.வில்சன் எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Related Tags :
Next Story