தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்


தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
x
தினத்தந்தி 1 Oct 2020 1:01 PM IST (Updated: 1 Oct 2020 1:01 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

சென்னை,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல் மற்றும் கிளப்புகளில் உள்ள மதுபான பார்களையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் விதிகளை மீறி டாஸ்மாக் கடைகளை திறப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். 

Next Story